×

6 செம்மரங்கள் வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் * 11 கட்டைகள், ரம்பம் பறிமுதல் * வனத்துறையினர் அதிரடி குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி காப்பு காட்டில்

குடியாத்தம், நவ.8: குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி காப்பு காட்டில் 6 செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் வனத்துறையினர் வருவதை பார்த்ததும் அவற்றை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து வனத்துறையினர் 11 செம்மரக்கட்டைகள், ரம்பம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள வனப்பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உள்ளது. இதனால் அவ்வப்போது தண்ணீர் தேடி வனவிலங்குகள் காப்பு காடு ஒட்டியுள்ள கிராமம், நகர பகுதியில் தஞ்சம் புகுந்து வருகிறது. மேலும் காப்பு காட்டில் ஏராளமான செம்மரங்களும் உள்ளது. அதனால் இப்பகுதியில் வனத்துறையினர் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று வீரிசெட்டிபல்லி காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது மரம் வெட்டும் சத்தம் கேட்டது. இதனையறிந்த வனத்துறையினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வனத்துறையினர் வருவதை கண்டதும் செம்மரங்களை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் அவற்றை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்கள். தொடர்ந்து, வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது 6 செம்மரங்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது. மேலும், அவற்றை ரம்பம் மூலம் 11 துண்டுகளாக வெட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் 11 செம்மரக்கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்திய 4 ரம்பம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், செம்மரங்களை வெட்டிய நபர் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 6 செம்மரங்கள் வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் * 11 கட்டைகள், ரம்பம் பறிமுதல் * வனத்துறையினர் அதிரடி குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி காப்பு காட்டில் appeared first on Dinakaran.

Tags : Veerisetipalli reserve forest ,Vierisetibali reserve ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...